U 19 WC Final – மீண்டும் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது.
அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்-ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார்.
அவரது பந்து வீச்சில் முசீர் கான் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்னிலும் சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா 9 ரன்னிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பொறுப்புடன் விளையாடி வந்த ஆதர்ஷ் சிங் 47 ரன்னிலும் முருகன் அபிஷேகம் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே நம்பிக்கையாக இருந்த அவர்கள் அவுட் ஆனதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் ஆஸ்திரேலியாவிடம் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஐசிசி கோப்பையை தவறவிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது.
அதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.