வேகவைத்தால் மட்டுமே முழு பலனையும் தரும் உணவுப்பொருட்கள்!
உணவே நம் வாழ்விற்கு அடிப்படை என்பது உண்மை என்றாலும் உணவு உண்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உல்ளன. சிலர் உணவுகளை பச்சையாக உண்பது நல்லது என்று சொன்னால், சிலரோ உணவுகளை வேகவைத்து உண்பது அவசியம் என்று சொல்வார்கள். எது எப்படியிருந்தாலும், உடலுக்கு வலிமையை அளித்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவு நமக்கு அவசியமான ஒன்று.
உணவு வகைகள்
வேக வைத்த உணவு நல்லதா இல்லையா என்றால் அது மிகவும அழமாக அலச வேண்டிய ஒன்று. சில உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடலாம் என்றால், சிலவற்றை சமைத்துத் தான் உண்ண வேண்டும். சிலவற்றை சமைக்காமலும் உண்ணலாம், சமைத்தும் உண்ணலாம். எப்படி சாப்பிட்டாலும் நன்மைத் தரும் உணவுகள் அவை.
உணவில் சிறந்தது சைவமா இல்லை அசைவமா
அதேபோல, உணவில் சிறந்தது சைவமா இல்லை அசைவமா என்ற கேள்வியும் மிகவும் தீவிரமானது. சைவமே சிறந்தது என்று சொல்ல ஆயிரம் காரணங்களை ஒருவர் பட்டியலிட்டால், அசைவத்தின் முக்கியத்துவத்தையும் ஊட்டச்சத்து பண்புகளையும் மற்றொருவர் பட்டியலிடுவார். இது போன்ற வாத விவாதங்களில் எது சரி இல்லை தவறு என்று சொல்வது வேறு விஷயம். ஆனால், அனைத்துமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு பேசப்படுபவை.
சில உணவுகளை சமைக்காமல் சாப்பிடவேக்கூடாது. இந்த உணவுகளின் பட்டியலைத் தெரிந்துக் கொண்டு, சமைத்த பிறகே உண்ணுங்கள். அதற்கான காரணத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
வேகவைத்தே சாப்பிட வேண்டிய உணவுகள்
சில காய்கறிகள் பச்சையாக உண்ணப்படுகின்றன மற்றும் சில சமைத்த பிறகு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. ஆனால் சில காய்கறிகள் மற்றும் தானியங்களை வேகவைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கும், சமைத்து உண்ணும் போது பலன் தரும் 5 உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
முட்டை
முட்டை புரதத்தின் ஒரு நல்ல மூலமாகும். இது தசைகளை வலுவாக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. உடலில் பலவீனம் ஏற்பட்டால் நீக்கவும் பயன்படும் முட்டையை வேகவைத்து உண்பது நல்லது.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள், பட்டாணி மற்றும் கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளளை வேக வைக்கும்போது, அதில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உடலுக்கு பலம் கொடுப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
கீரை வகைகள்
பச்சை இலைக் காய்கறிகளில் இரும்பு உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. வேகவைத்த கீரையில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் கே, கால்சியம் போன்ற முக்கிய சத்துக்கள் ஏராளமாக உள்ளன. உடலுக்கு பலம் தரும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட கீரைகள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன் எலும்புகளையும் பலப்படுத்துகிறது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை ஒருபோதும் பச்சையாக உண்ணக்கூடாது, வேகவைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்களைக் கொண்ட உருளைக்கிழங்கு சமைத்தால் தான், அது செரிமான செயல்முறையை மேம்படுத்ம். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, சருமத்தை பளபளக்கச் செய்யும்.
முழு தானியங்கள்
பழுப்பு அரிசி, ஓட்ஸ், குயினோவா ஆகியவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தும் இந்த முழு தானியங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆனால் இவற்றை வேகவைத்து தான் அதாவது சமைத்து உண்ண வேண்டும்.