பாகிஸ்தான் பொதுத் தேர்தல்!!!! இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னிலை
நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவர்கள் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்கட்சி மீதான அழுத்தம் காரணமாகவே இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக இவர்கள் தோன்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் உள்ள 266 இடங்களில் 49 இடங்களை பிடிஐ கட்சியின் உறுப்பினர்கள் கைப்பற்றியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தற்போது 42 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களையும் பெற்றுள்ளன.