இலங்கை

பெலியத்தவில் ஐவர் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

பெலியத்தவில் ஐவர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.லைக்கு தலைமை தாங்கியவரான கொஸ்கொட சுஜீயின் உதவியாளரான ‘சாமிக’ என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள கருவாத்தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியுடன் மகசீன் மற்றும் 32 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் தொடர்பான விசாரணையின் போது, ​​குறித்த துப்பாக்கியை கொஸ்கொட சுஜீ வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 2008 ஆம் ஆண்டு இலங்கை காலாட்படையில் இணைந்துகொண்டதாகவும், 2009ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.குறித்த சந்தேக நபர் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு பெரிதும் அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் செய்த குற்றங்கள் மற்றும் கொஸ்கொட சுஜீயின் குழுவினரால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக இந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்வதற்காகவும் மற்றும் சந்தேகநபர் தன்னியக்க துப்பாக்கிகளை பயன்படுத்தி பயங்கரவாத தடைக்கான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், அவர் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பெலியத்த ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் கார் ஒன்று தும்மலசூரிய பிரதேசத்தில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.அத்துடன், கொலையாளிகள் பயணித்த பெஜிரோ ஜீப்பிற்கு போலி இலக்கத் தகடுகளை தயார் செய்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்