ஜெர்மனி வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயல் – 735000 யூரோ திருட்டு
ஜெர்மனி வங்கியில் பணியாற்றிய இளம் பணியாளர் ஒருவர் பல லட்சம் யூரோக்களை சூறையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயன் மாநிலத்தில் உள்ள ஃவெல்க் எக்கிரஸ் என்று சொல்லப்படுகின்ற ஒரு பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவர் வேலைக்கு சேர்ந்த குறுகிய காலங்களில் 735000 யுரோக்களை வங்கியில் இருந்து திருடியதாக தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் விசாரணைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது இவர் ஜெர்மனியின் மத்திய வங்கியின் பணத்துக்கு ஏற்கனவு நியமனம் கொடுத்ததாகவும், இந்த பணம் வந்த பிறகு இந்தபணத்தை பதுகாப்பான இடத்தில் வைக்காமல் திருடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளையில் தற்பொழுது இந்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும்,
இந்த வழக்கு விசாரணையில் இந்த நபரானவர் குற்றவாளியாக பார்க்கப்படும் பட்சத்தில் இளைஞர்களுக்கான சட்டத்தின் படி இவருக்கு அதி கூடிய தண்டனையாக 6 வருட சிறை தண்டனை எதிர்பார்க்கப்படுகின்றது.