சிகிச்சைக்கு பணம் இல்லை!! கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு
சூரியவெவ பிரதேசத்தில் கணவன்-மனைவி தம்பதியொருவர் மனைவியின் சுகயீனத்திற்கு சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தினால் கடந்த (04) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சூரியவெவ வெனிவேலில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மனைவி நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சுதந்திர தினத்தன்று மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும், வாழக் கூட பண வசதி இல்லாததாலும், மனைவிக்கு சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததாலும் கணவனும் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.





