சிங்கப்பூரில் வீடுகளுக்காகக் காத்திருக்கும் இளம் குடும்பங்களுக்கு வெளியான தகவல்
சிங்கப்பூரில் இளம்பெற்றோர் இடைக்காலக் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என கூறப்படுகின்றது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இதனை தெரிவித்துள்ளது. தற்போது 2,000ஆக இருக்கும் அந்த வீடுகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுக்குள் 4,000ஆக அதிகரிக்கப்படும்.
Selective En bloc Redevelopment Scheme (SERS) எனும் ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்துக்காகத் தங்ளின் ஹால்ட் (Tanglin Halt) பகுதியில் காலியாக இருக்கும் வீடுகள் PPHS திட்டத்துக்குக் கீழ் கொண்டுவரப்படும். புதிய வீடுகளைக் கட்டிமுடிக்கக் காத்திருக்கும் இளம்தம்பதிகளுக்கு PPHS வீடுகள் தற்காலிக வீடுகளாக அமைகின்றன.
பதினெட்டு வயதுக்குக் குறைவான பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர், குழந்தைக்காகக் காத்திருக்கும் இளம்பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்படும்.
இளம்பெற்றோர் இடைக்காலக் குடியிருப்புத் திட்டம் 2013ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. அதுமுதல் இதுவரை அந்தத் திட்டத்தில் 4,200க்கும் அதிகமான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.