இராணுவச் சட்டத்தை மேலும் நீட்டிக்க ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
இராணுவச் சட்டம் மற்றும் பொது அணிதிரட்டலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க உக்ரைன் பாராளுமன்றத்தில் ஒரு திட்டத்தை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமர்ப்பித்துள்ளார்.
24 பிப்ரவரி 2022 அன்று ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியபோது ஜனாதிபதி முதலில் இராணுவச் சட்டம் மற்றும் பொது அணிதிரட்டலை அறிவித்தார்.
அதன்பிறகு இந்த நடவடிக்கை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் பாராளுமன்றம் முன்னர் இராணுவச் சட்டம் மற்றும் அணிதிரட்டலை நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 14, 2024 வரை நீட்டித்தது.
ஜெலென்ஸ்கியின் முன்மொழிவு இரண்டு நடவடிக்கைகளையும் மே 14 வரை நீட்டிக்கும்.
யுத்தம் தொடங்கியதில் இருந்து இராணுவச் சட்டம் தொடர்பான பாராளுமன்றத்தின் 10வது வாக்கெடுப்பு இதுவாகும் என்று சட்டமியற்றுபவர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் கூறியுள்ளார்.
இராணுவச் சட்டத்தின் கீழ், 18 மற்றும் 60 வயதிற்குட்பட்ட உக்ரேனிய ஆண்கள், சில விதிவிலக்குகளுடன், அவர்கள் இராணுவ சேவைக்கு அழைக்கப்படலாம் என்பதால் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.