கொழும்பில் பிரபல ஐந்து நட்சத்திர ஹேட்டலில் வழங்கப்பட்ட சூப் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
கொழும்பில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு தகுதியற்ற சூப் வழங்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இரவு விருந்தொன்றின் போது இந்த சூப் பரிமாறப்பட்டதாகவும், அதன் தரம் தொடர்பில் அதிருப்தி நிலவுவதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நிறுவனம் ஒன்றிடம் இருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர்கள் சூப்பின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்ததில் இரவு உணவின் போது சூப்புடன் வழங்கப்பட்ட வெள்ளை மிளகாயில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்திற்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஹோட்டலில் இருந்து பொருத்தமற்ற சூப் பரிமாறப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹோட்டலின் உணவகத்தில் பரிமாறப்படும் சூப்பினால் இந்த நிலை ஏற்படவில்லை எனவும், அதனை சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் வெள்ளை மிளகாயை சேர்த்ததால், சாப்பிட செல்லும் போது சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக வழங்கப்பட்ட முழு வெள்ளை மிளகு கையிருப்பையும் ஹோட்டல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் ஹோட்டல் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு நிர்வாகம் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவை வழங்கியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.