வாக்னர் கூலிப்படை தொடர்பில் புட்டின் அதிரடி நடவடிக்கை!
ரஷ்யா தனது தேசிய பாதுகாப்பில் முன்னாள் வாக்னர் பிரிவுகளை இணைத்துக்கொள்வதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
கடந்தாண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த ஆண்டு ரஷ்ய தேசிய காவலர் தனது சொந்த தன்னார்வ அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்டத்தில் கையெழுத்திட்டார்
அதன்படி ரோஸ்க்வார்டியா பெரும்பாலும் புடினின் “தனியார் இராணுவம்” என்று குறிப்பிடப்படுகிறது
“ரோஸ்க்வார்டியா அதன் புதிய தன்னார்வப் பிரிவினரை உக்ரைன் மற்றும் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பக்கூடும். ரோஸ்க்வார்டியா தன்னார்வலர்களுக்கு உக்ரைனில் சேவை செய்வதற்கான ஆறு மாத ஒப்பந்தங்களையும், ஆப்பிரிக்காவில் சேவைக்கான ஒன்பது மாத ஒப்பந்தங்களையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
ரோஸ்க்வார்டியாவின் தன்னார்வப் படையில் முன்னாள் வாக்னர் தாக்குதல் பிரிவினரை இணைத்துக்கொள்வது, வாக்னர் வெற்றிகரமாக ரோஸ்க்வார்டியாவுக்கு அடிபணிந்து, வாக்னர் குழுவின் மீதான ரஷ்ய அரசின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளதைக் குறிக்கிறது.
.