சிங்கப்பூரில் பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியர்கள் – அதிகரிக்கும் எண்ணிக்கை
சிங்கப்பூரில் கடந்த வருடம் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு இன்று வெளியிட்ட வேலைச் சந்தை குறித்த முன்னோடி மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையில் இருந்து நீக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு 14,320ஆகும், 2022 ஆம் ஆண்டு 6,440 பேராகும்.
கடந்த ஆண்டின் 3ஆம் காலாண்டுடன் ஒப்புநோக்க இறுதிக் காலாண்டில் வேலை நீக்கம் செய்யப்பட்டவரின் எண்ணிக்கை சற்று குறைந்தது.
சிங்கப்பூரில் வேலை செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து 9ஆவது காலாண்டாக அதிகரித்துள்ளது.
சென்ற காலாண்டில் கூடுதலாக 8,400 பேர் ஊழியரணியில் சேர்ந்தனர்.
மெதுவடைந்துள்ள பொருளியல் சூழலுக்கு இடையிலும், வேலை செய்வோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு முழுமைக்கும் அதிகரித்தது.
(Visited 10 times, 1 visits today)