ஆசியா

இந்தியர்கள் புறக்கணிப்பு – மாலைத்தீவிற்கு ஏற்பட்ட நிலை

சுற்றுலாத் தலங்களில் மூன்றாவது இடத்தில் இருந்த மாலைத்தீவு தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியர்களின் புறக்கணிப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்று வந்தார். அது குறித்த தனது அனுபவங்களை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார்.

‘அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இதனால் மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டனர்.

மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதன் காரணமாக பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். இதனால் 10,500 ஓட்டல்களின் முன்பதிவுகளும், 5,520 விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டது.

மேலும் #BoycottMaldives என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இதனால் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மாலத்தீவு 3-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது 3-வது இடத்தில் சீனா இடம்பெற்றுள்ளது.

 

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!