துணைக் காவல் கண்காணிப்பாளராக இந்திய கிரிக்கெட் வீராங்கனை நியமனம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி சர்மா.
தற்போது இந்திய அணியில் ஆல்ரவுண்டராக அவர் ஜொலித்து வருகிறார். மேலும் இந்திய அணியின் மேட்ச் வின்னராகவும் உருவெடுத்துள்ளார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை சமீபத்தில் தீப்தி சர்மா படைத்தார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை பொறுத்தவரையிலும், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்நிலையில் தீப்தி சர்மாவின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை துணைக் காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) நியமித்துள்ளது.
தீப்தி சர்மாவுக்கு விருது மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பணி நியமன கடிதத்தையும் உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழங்கினார்.