மோனாலிசா ஓவியத்தை சேதப்படுத்திய விஷமிகள்!

லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசா ஓவியத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சூப்பை கொண்டு சேதப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்சில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியத்தின் மீது உணவுப் பாதுகாப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பிய இரண்டு எதிர்ப்பாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டு துளைக்காத கண்ணாடி கவரால் பாதுகாக்கப்பட்டதால் ஓவியத்தை சேதப்படுத்த முடியவில்லை என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் உலகில் மிகவும் பிரபலமான ஓவியமாக கருதப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)