இலங்கை திவாலானதாக அரசாங்கம் அறிவிக்கவில்லை – மத்திய வங்கி ஆளுனர்!

இலங்கையை திவாலானதாக அரசாங்கம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில வெளிநாட்டு கடனாளிகளுக்கு கடன் தவணையை செலுத்த முடியாது என அறிவித்த ஒரு சந்தர்ப்பம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாடு மூடப்பட்டமையே நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)