சிங்கப்பூரில் தாய்க்கு மகன் செய்த அதிர்ச்சி செயல்
சிங்கப்பூரில் தூங்கிக்கொண்டிருந்த தாயைத் தலையணையை வைத்துக் கொல்ல முயன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிராங்கூன் செண்ட்ரலில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. யோங்கிற்கு 34 வயது. அவரின் தாய்க்கு வயது 77ஆகும்.
அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்றும் தமது தாயைப் பார்க்க விரும்புவதாகவும் யோங் கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அவர் சாங்கிச் சிறைச் சாலையில் இருந்தபடி நீதிமன்றத்தில் தோன்றினார். அவரை மனநலச் சோதனைக்காகத் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
யோங் தாயாரின் நிலைமை என்ன என்று நீதிபதி கேட்டார். அதற்குப் பதில் அளித்த அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர், யோங்கின் தாய் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்று நம்புவதாகக் கூறினார்.
ஜனவரி 16ஆம் திகதி தாயார் தூங்கிக்கொண்டிருந்தபோது யோங் அவரின் முகத்தின்மீது தலையணையை அழுத்திக் கொல்ல முயன்றதாகக் குற்றச்சாட்டு சொல்கிறது. அது குறித்து ஜனவரி 18ஆம் திகதி பொலிஸாருக்கு புகார் கிடைத்தது.
யோங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம், அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படிகளும் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.