சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் 11 ஆண்கள் மீது மானபங்கம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வயது 21 முதல் 67 வயதுக்கு உட்பட்டவர்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தனித்தனி மானபங்க சம்பவங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அதில் ஒரு சம்பவத்தில், லிட்டில் இந்தியா பகுதியில் சிராங்கூன் சாலையில் 21 வயது இளைஞன் 26 வயதுமிக்க பெண்ணை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 12, அன்று இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது. பின்னர் அந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் யார் என்ற விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
இந்நிலையில், மானபங்கம் செய்ததாக அவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
(Visited 16 times, 1 visits today)