ஜப்பானில் கடும் பனிப்பொழிவு : போக்குவரத்து முடக்கம்!

மத்திய ஜப்பானில் உள்ள ஒரு முக்கிய விரைவுச் சாலையில் கடும் பனி காரணமாக போக்குவரத்து முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
Gifu மாகாணத்தில் உள்ள Meishin விரைவுச்சாலையில் இரண்டு டிரக்குகள் பனியில் சிக்கியதை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் டஜன் கணக்கான வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக மத்திய நிப்பான் எக்ஸ்பிரஸ்வே தெரிவித்துள்ளது.
வாகனங்களில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 1 visits today)