IIT Madras பல்கலைக்கழகத்தின் கிளை இலங்கையில்
இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Indian Institute of Technology Madras (IIT Madras) கிளை இந்த ஆண்டு கண்டியில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை IIT Madrasஇன் வெளிநாட்டு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், மேலும் புதிய பல்கலைக்கழகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் பட்ஜெட் 2024 இல் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சின் அறிஞர்கள் குழுவொன்றை IIT Madrasக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தை அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக IIT Madras குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக இலங்கைக் குழு இந்தியாவுக்கு அனுப்பப்படும் என வட்டாரங்கள் தெரிவித்தன.
(Visited 12 times, 1 visits today)