கடுமையான குளிர் காலநிலை காரணமாக அமெரிக்காவில் 90 பேர் பலி
ஆர்க்டிக் புயலால் அமெரிக்காவின் பல மாநிலங்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நிலவும் பனிப்புயல் மற்றும் கடுமையான குளிர் காலநிலை மக்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடுமையான குளிர்கால புயல்கள் காரணமாக, அமெரிக்காவில் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 90 இறப்புகள் பதிவாகியுள்ளன.
டென்னசி மற்றும் ஓரிகான் ஆகியவை புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன.
மோசமான வானிலை காரணமாக டென்னசியில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓரிகானில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகும். ஆர்க்டிக் புயலின் தாக்கம் காரணமாக ஓரிகான் மாநிலத்தில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, கடுமையான குளிர்கால வானிலை மற்றும் பனி புயல்கள் காரணமாக இறப்புகள் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வாஷிங்டன், கென்டக்கி, விஸ்கான்சின், நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்களிலிருந்தும் பதிவாகியுள்ளன.