இலங்கையில் அதிர்ச்சி – துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழப்பு
மாத்தறை – பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.





