விரைவில் வட கொரியாவிற்கு விஜயம் செய்யும் விளாடிமிர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் பியோங்யாங்கிற்குச் செல்வதற்கான தனது விருப்பத்தைக் தெரிவித்துள்ளதாக வட கொரியாவின் அரச ஊடகமானமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்த வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய்யை சந்தித்தபோது, வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வருகைக்கு அழைப்பு விடுத்ததற்கும் புடின் நன்றி தெரிவித்தார் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வடகொரியாவுக்கு ரஷ்யத் தலைவரின் முதல் பயணம் இதுவாகும்.
கிம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திங்களன்று, கிம்மின் அழைப்பின் பேரில், வட கொரியாவிற்கு புட்டின் விஜயம் “எதிர்காலத்தில்” நடக்கும் என்று ரஷ்யா நம்புவதாகக் கூறினார், ஆனால் திகதி எதுவும் இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் சோவின் வருகையின் போது, உக்ரைன் இராணுவ நடவடிக்கையில் வடகொரியாவின் ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு ரஷ்யா நன்றி தெரிவித்ததாக KCNA தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் இறையாண்மை உரிமைகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆத்திரமூட்டும் செயல்கள் குறித்து மாஸ்கோ மற்றும் பியோங்யாங் தீவிர கவலை தெரிவித்தன, அதே நேரத்தில் பிராந்திய சூழ்நிலையை கையாள்வதில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது.