கொழும்பு மாவட்டத்தில் எடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை
கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் டெங்கு நோயாளர்களில் இருபது வீதமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகுவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அதன்படி இவ்வருடம் கடந்த 18 நாட்களில் 6689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.





