ஆசியா

மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்துக்கு மத்தியில் செயற்கைக்கோளை செலுத்தியது ஈரான்

மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அரசு தனது விண்வெளி திட்டத்தில் புதிய செயற்கைக் கோளை செலுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

குயேம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சோரயா செயற்கைக்கோள், பூமியில் இருந்து 750 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. எனினும், செயற்கைக்கோளின் பணி என்ன என்பதை வெளியிடவில்லை.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுதவிர ஈரான் மீது பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீது ஈரானும் வான் தாக்குதல் நடத்தின. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் தனது செயற்கைக் கோள் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது

Iran launches satellite that is part of a Western-criticized program as  regional tensions spike | Arab News

2023-ம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட கணிப்பில், ஈரானின் செயற்கைக்கோள் ஏவும் வாகனங்களின் உருவாக்கம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை ஒத்திருப்பதாக கூறியிருந்தது.

அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படலாம். உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் முறிந்த பிறகு, ஈரான் இப்போது யுரேனியத்தை ஆயுதங்களில் பயன்படுத்தும் தரத்தில் உற்பத்தி செய்து வருகிறது. இந்த விஷயத்தில் சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ஈரானை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் அணு ஆயுத தயாரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்து வருகிறது. மேலும், ஈரானின் அணுசக்தி செயல்பாடுகளை போலவே, விண்வெளித் திட்டமும் முற்றிலும் பொதுமக்களின் நலனுக்காகவே உள்ளது என்று கூறுகிறது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்