கொழும்பில் அபாயகரமான கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை
கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற கொழும்பு மாநகர சபை (CMC) தீர்மானித்துள்ளது.
வியாழன் (ஜனவரி 18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி, இது தொடர்பில் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு அந்த மக்களைப் பரிந்துரைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, அவர்கள் திம்பிரிகஸ்ய கிருல அபேயாராம வீடமைப்பு வளாகம், குணானந்த வீடமைப்பு வளாகம், கொழும்பு 13 வீடமைப்பு வளாகம் மற்றும் மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை மற்றும் ஜும்மா மஜித் வீதி ஆகிய வீட்டுத் தொகுதிகளில் தங்கவைக்கப்படவுள்ளனர்.