செங்கடலை மீண்டும் பதற்றமடைய செய்யும் ஹவுத்திகள்!! பதிலடி கொடுக்க தயாராகும் அமெரிக்கா
செங்கடலில் ஹவுதி போராளிகள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
செங்கடலில் பயணித்த அமெரிக்கக் கப்பலின் மீது ஹூதி போராளிகள் மற்றொரு தாக்குதல் நடத்திய சூழலில் அவர் இவ்வாறு கூறினார்.
ஹவுதி போராளிகள் கப்பலின் மீது இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர். பென்டகனும் தனது கப்பல் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது.
ஹவுதி தீவிரவாதிகளை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களது தாக்குதல்களால் கப்பல் நேரடியாக பாதிக்கப்பட்டதாக ஹூதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை ஹூதி போராளிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த வியாழன் அன்று, செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை தீவிரவாதிகள் தாக்கியதை அடுத்து அமெரிக்காவும் பிரிட்டனும் பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது.
அவுஸ்திரேலியா, பஹ்ரைன், நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.