ரூபா 60 மில்லியன் மதிப்புள்ள கஞ்சாவுடன் மூவர் கைது
ரூபா 60 மில்லியன் மதிப்புள்ள கஞ்சாவை வைத்திருந்த 3 பேர். யால வனப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாருடன் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு, விற்பனைக்காக இருந்ததாகக் கூறப்படும் 1,570 கிலோகிராம் கஞ்சா மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
யால வனச்சரகத்தின் சுஹந்திரம் ஆருவில் எளிதில் அணுக முடியாத பகுதியில் அமைந்துள்ள 4 ½ ஏக்கர் நிலப்பரப்பில் சந்தேகநபர்கள் கஞ்சா சாகுபடியை பராமரித்து வந்துள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகனார பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.





