பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு!
பாகிஸ்தானின் இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தானின் பிரதமர் இராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்களுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய சீனா முன்வந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் நிதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)