சீனாவில் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள பேராபத்து!
வடக்கு சீனாவில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
பனிச்சரிவுகள் சாலைகளை அடைத்ததால், சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்பாளர்களும் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்படரின் உதவியுடன் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிச்சரிவுகள் 350 கிலோமீட்டர் (220 மைல்) சாலைகளை பாதித்ததாக உள்ளூர் நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் சமீபகாலமாக பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை குறைந்தபட்சமாக 31 பனிச்சரிவுகள் பதிவாகியுள்ளதாகவும், சின்ஜியாங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)