யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – இளவாலையில் நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்0டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒரு சந்தேகநபர் சான்று பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்று (14) திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த இளவாலை நாதவோலை பகுதியினை சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்ய சென்ற போது சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டது.
குறித்த சந்தேநபரை கைது செய்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)