இத்தாலியில் திருமண விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட பரபரப்பு – 30 பேர் காயம்
இத்தாலியில் திருமண விருந்து நிகழ்ச்சியின் போது தரை உடைந்ததால் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முன்னாள் Tuscan convent கட்டடத்தில் அந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்தது. சுமார் 60 பேர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது தரை உடைந்து கீழே இருக்கும் விருந்தினர் அறைக்குள் விழுந்ததாக இத்தாலிய ஊடகங்கள் கூறின.
பொலிஸார் தீயணைப்புக் குழுவினர் உள்ளிட்ட 100க்கும் அதிகமான அவசரப்பணி ஊழியர்கள் சம்பவ இடத்தில் உதவினர்.
(Visited 21 times, 1 visits today)





