ஐஸ்லாந்தில் எரிமலைக் குழம்பு வெளியேறியதால் தீக்கிரையான வீடுகள்
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜான் தீபகற்பத்தில் உள்ள கிரின்டாவிக் நகருக்கு அருகே எரிமலை வெடித்ததை அடுத்து பாய்ந்த எரிமலைக் குழம்பு காரணமாக ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
நேற்று அதிகாலை ஏற்பட்ட எரிமலைக் குழம்பு காரணமாக நகருக்குச் செல்லும் பிரதான வீதியும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் முதல், 20,000 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, மேலும் எரிமலை வெடிக்கும் அபாயம் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டது மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எரிமலைக்குழம்பு வெளியேறுவதைத் தடுக்க தடுப்புகள் கட்டப்பட்டதாகவும், ஆனால் அந்தத் தடைகள் உடைந்து எரிமலைக்குழம்பு நகருக்குள் புகுந்ததால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.