களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
இன்று பிற்பகல் களுத்துறை கல்லூரிக்கு முன்பாக உள்ள குளத்தில் மூழ்கி 15 மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவிகள் இருவர் மற்றும் 17 வயதுடைய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை பன்வில பகுதியைச் சேர்ந்த இவாங்கி மதுஹாஷினி (வயது 15), தொடங்கொட நவிலியாவத்தை பகுதியைச் சேர்ந்த கிவிது சத்சர (வயது 17) மற்றும் தொடங்கொட பகுதியில் வசிக்கும் சுபானி சுபேசலா (வயது 16) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இரண்டு மாணவர்களும் இந்த வருடம் சாதாரணத் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவி, உயிரிழந்த மாணவரின் காதலன் எனவும், தெரிவிக்கப்படுகின்றது.
முதன்முறையாக களுத்துறை கடலில் நீராடிய இவர்கள் உயிரிழந்த மாணவர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க களு கங்கையில் நீராட வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலில் இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கியதாகவும், அவர்களை காப்பாற்ற மாணவன் முயன்றபோது அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
நீந்திக் கொண்டிருந்த மூவரும் நீரில் மூழ்கிய போது, பல படகுகள் மற்றும் ஜெட்ஸ்கிகள் அருகாமையில் வந்ததால், அவர்கள் ஜெட்ஸ்கியில் இருந்து மீட்கப்பட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.