ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்!
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு ஹமாஸ் செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Mossad, (இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம்) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) கூறுகையில், ஹமாஸ் “உலகம் முழுவதும் உள்ள அப்பாவிகளை தாக்குவதற்காக வெளிநாடுகளில் தனது வன்முறை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தது” என்பதை நிரூபிக்கும் “கணிசமான” தகவல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள ஹமாஸ் தளபதிகளிடமிருந்து தாக்குதல்களுக்கான இலக்குகள், அதனை முன்னெடுப்பவர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் ஸ்வீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தைத் தாக்கும் நோக்கம் பற்றிய தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மொசாட், ஐஎஸ்ஏ மற்றும் ஐடிஎஃப் ஆகியவை ஹமாஸின் பயங்கரவாத நோக்கங்களை முறியடிக்கும் முயற்சிகளை தொடரும் என்று இஸ்ரேல் கூறியது.