சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டமிடும் கனடா!
கனடாவில் வசிக்க அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், வெளியிட்டுள்ள தகவலின்படி, கனடா வீட்டு வசதி நெருக்கடிக்கான விமர்சனங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா தனது பொருளாதாரத்தை இயக்குவதற்கும், வயதான மக்களை ஆதரிப்பதற்கும் குடியேற்றத்தை சார்ந்துள்ளது மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டுதோறும் குடியேற்றத்தை அதிகரித்து வருகிறார்.
பணவீக்கம் கட்டுமானத்தை மெதுவாக்கியது போலவே, குடியேற்றவாசிகள் மற்றும் சர்வதேச மாணவர்களின் அதிகரிப்பு வீடுகளுக்கான தேவையை தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் சர்வதேச மாணவர்களுக்கான வரம்பை தாராளவாத அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.