செய்தி வட அமெரிக்கா

பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 2000 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று கடுமையான சூறாவளி புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்தது.

இதனால் கிரேட் லேண்ட் மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால் 97 ஆயிரம் பேர் இருளில் மூழ்கி தவித்து வருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2,400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சுமார் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகிறார்கள்.

மேலும் பல நகரங்களில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!