பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல் புரளி – சோதனைக்குட்படுத்தப்பட்ட பேருந்து
பிரான்ஸின் Lille நகரில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரெசெல்ஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த Flixbus பயணிகள் பேருந்து ஒன்று இடைமறிக்கப்பட்டுச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பயணிகள் மூவர் விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் என்று பயணி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே பெல்ஜியம் பொலிஸார் வெற்றரன் (Wetteren) என்ற இடத்தில் வைத்து பஸ்ஸை வழிமறித்துப் பயணிகள் அனைவரையும் வெளியேற்றிச் சோதனை நடத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் பற்றிய தகவலைச் சக பயணிகள் சிலரது உரையாடலின் மூலமே தான் அறிந்து கொண்டதாக பிரஸ்தாப பயணி கூறியதை அடுத்தே பொலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
எனினும் அச்சுறுத்தலின் உண்மைத் தன்மை உடனடியாக உறுதிப்படுத்தப் படவில்லை என்று ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவித்தது.