பப்புவா நியூ கினியாவில் அவசர நிலை பிரகடனம்
பப்புவா நியூ கினியாவின் பிரதமர் தலைநகரில் 14 நாள் அவசரகால நிலையை அறிவித்தார்,
கூட்டத்தினர் கொள்ளையடித்து கடைகளை எரித்ததால் ஏற்பட்ட கலவரத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
போர்ட் மோர்ஸ்பியில் படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் ஆகியோர் தங்களது ஊதியத்தில் விவரிக்கப்படாத விலக்குகள் தொடர்பாக போராட்டங்களைத் தொடங்கியதை அடுத்து வன்முறை ஆரம்பித்தது.
சில மணி நேரங்களில் அமைதியின்மை தலைநகருக்கு வடக்கே சுமார் 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள லே நகருக்கும் பரவியது.
“எங்கள் நாட்டின் தலைநகரில் 14 நாட்களுக்கு அவசரகால நிலைக்கு இன்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என்று பிரதமர் ஜேம்ஸ் மராப் அறிவித்தார்.
1,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் “முன்னோக்கிச் செல்லக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்த” தயார் நிலையில் உள்ளன, என்றார்.
போர்ட் மோர்ஸ்பி மற்றும் லேயில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் கமிஷனர் டேவிட் மானிங் தெரிவித்தார்.