பிரித்தானிய இளவரசி ஆனி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானியா இளவரசி ஆனி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இளவரசி ஆனியுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸும் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.
இதேவேளை, 10 மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் தூதுவர்களிடம் தெரிவித்த ஜனாதிபதி, அந்த நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும், அதற்கான புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.