மலையகத்தில் விறகு தேடிச்சென்றவர் ஓடையொன்றிலிருந்து சடலமாக மீட்பு..!

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில் தோட்டம் 2 ம் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய சுப்புன் நாமல் என்பவர் புதன்கிழமை (10) மதியம் 11 .30 மணியளவில் விறகு சேகரிக்க சென்று வீடு திரும்பாததால் இது தொடர்பில் அவரது தந்தை கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளார்.
அதற்கமைய பொலிஸார் ஈடுபட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கெனில் தோட்டம் 2 ம் பிரிவு வன பகுதியில் உள்ள ஓடையொன்றிலிருந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் , மீட்கப்பட்டுள்ள சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கினிகத்தேன மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)