புத்தம் புதிய பொருளை அறிமுகம் செய்யும் Apple

Apple நிறுவனம் 2015ஆம் ஆண்டில் Apple கடிகாரம் அறிமுகம் செய்த நிலையில் அதன்பின் நிறுவனம் தற்போது புத்தம் புதிய பொருளை விற்கவுள்ளது.
Vision Pro எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பச் சாதனம் அடுத்த மாதம் 2ஆம் திகதி அமெரிக்காவில் விற்கப்படும்.
பார்ப்பதற்குப் பாதுகாப்புக் கண்ணாடியைப்போல் இருக்கும்.
சாதனத்தைப் போட்டுக்கொண்டால் திரையில் தென்படும் காட்சி வெளியுலகில் இருப்பதைப்போல் தோன்றும்.
பயனீட்டாளர்கள் அவ்வாறு இணையத்தளங்களுக்குச் செல்லமுடியும். உரையாடல் செயலிகளைப் பயன்படுத்தமுடியும்.
கண்ணாடி போட்டுக்கொண்டாலும் வெளியுலகில் இருப்போர் பயனீட்டாளர்களின் கண்களைப் பார்க்கமுடியும்.
Vision Pro சுமார் 3,500 டொலர் விலை போகலாம்.
மெய்நிகர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் Meta நிறுவனத்துக்கு Apple போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)