சிங்கப்பூரில் 25,000 பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

சிங்கப்பூரில் சுமார் 25,000 பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
சோதனைச் சாவடிகளில் 300க்கும் அதிகமான ஆபத்தான பொருள்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
பாதுகாப்புச் சோதனைகள் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தைப் பொறுத்து நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் பயணிகள் வருவதற்குமுன் அவர்களை அனுமதிக்கமுடியுமா என்பதை முடிவுசெய்வதாகவும் சண்முகம் கூறினார்.
பயணிகளிடம் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளதாகத் தெரிந்தால் அவர்கள்மீது கூடுதல் சோதனை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)