எம்.பி.க்கள் குழு ஒன்று கப்பலில் விருந்து குறித்து துறைமுக அதிகாரசபையின் விளக்கம்
கொழும்பு துறைமுகத்தில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து தொடர்பில் அண்மையில் வெளியான ஊடக செய்திகளை மறுப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் பலர் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
சம்பவம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில், கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள், பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு வழமையான கப்பல் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர்கள் குழுவின் கண்காணிப்புச் சுற்றுலாவுக்காக கப்பல் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை மேலும் குறிப்பிடுகிறது.
ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உணவு அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக செலவிடப்படவில்லை என்றும் துறைமுக அதிகாரசபை கூறுகிறது.