வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கையின் பலப்பகுதிகளில் மழை!
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளது.
இது மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)





