மட்டக்களப்பு ஊடாக செல்லும் ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன!

மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழையுடன் ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக ரயில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)