ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்ற முகமது ஷமி
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை ராஷ்டிரபதி பவனில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.
#WATCH | Delhi: Mohammed Shami received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/znIqdjf0qS
— ANI (@ANI) January 9, 2024
தொடர்ந்து, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெறுகின்றனர். அர்ஜூனா விருதை 26 பேரும் பெறுகின்றனர்.
விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
#WATCH | Delhi: Para-archer Sheetal Devi received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/jwkFEd2CjH
— ANI (@ANI) January 9, 2024
தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.