இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய இளவரசி
பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரித்தானிய இளவரசியின் கணவர், வைஸ் அட்மிரல் சேர் டிம் லோரன்ஸும் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளவரசி ரோயல் கண்டி மற்றும் கொழும்பில் உள்ள மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்வார், மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது உள்ளூர் சமூகங்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்கிறார்.
இளவரசி ராயல் முன்னதாக மார்ச் 1995 இல் சேவ் தி சில்ட்ரன் இன் புரவலராக இலங்கைக்கு விஜயம் செய்து, தொண்டு நிறுவனத்தால் ஆதரிக்கப்படும் திட்டங்களைப் பற்றி மேலும் அறிந்து கொண்டார். இந்த பயணம் 2024 ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இருக்கும்.