தனது இறுதி இலக்கை அடைந்த ஆதித்தியா விண்கலம்!
இந்தியாவின் ஆதித்தியா எல்-01 விண்கலம், அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது குறித்த விண்கலமானது சூரியனை தொடர்ந்து அவதானிக்கும் இடத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விண்கலம் கடந்த செப்டம்பர் மாம் 2ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. அன்றில் இருந்து நான்கு மாதங்கள் சூரியனை நோக்கி பயணித்து வருகிறது.
சந்திரனின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய சில நாட்களுக்கு பிறகு, மற்றுமொரு சாதனையாக இந்த ஆதித்தியா விண்கலத்தை விண்ணில் செலுத்தியிருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மோடி, மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத முயற்சிக்கு இது ஒரு சான்று எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)