பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து : பலர் தங்கும் இடங்களை இழந்து அவதி!
பங்களாதேஷின் தெற்கு கடலோர மாவட்டமான காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகளின் நெரிசலான முகாமில் நேற்று (06.01) நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்குமிடங்களை எரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக மாற காரணமாகியதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்கியாவில் உள்ள குடுபலோங் முகாமில் சனிக்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. பலத் காற்றானது தீ வேகமாக பரவ வழிவகுத்துள்ளது.
இதனால் முகாம்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் திறந்த வெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
“நாங்கள் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளோம், கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். தற்போது, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து தப்பித்து என் பேரக்குழந்தைகளுடன் ஓடை ஓரத்தில் அமர்ந்துள்ளோம் என தீவிபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீ எப்படி ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், அகதிகளின் ஆரம்ப அறிக்கைகள் மண் அடுப்பினால் ஏற்பட்டதாகக் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்தினால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு மதிப்பிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.