இலங்கையில் கட்டுமான செலவு 20 வீதம் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள VAT அதிகரிப்பின் பின்னர் மொத்த நிர்மாணச் செலவுகள் 20% அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் திரு.எம்.டி.பால் கூறுகிறார்.
முன்னர் விலக்கு பட்டியலில் இருந்த இயந்திரங்கள், மின்சாரம், மின்விளக்குகள் போன்ற பல பொருட்கள் தற்போது VAT வரிக்கு பொருந்தும் எனவும் இதன் காரணமாக கட்டுமான செலவு 20% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
VAT வரிக்கு உட்பட்ட பொருட்களின் பட்டியலில் எரிபொருள் உள்ளடக்கப்பட்டதன் காரணமாக நிர்மாணத்துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)